Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: விரட் கோலி, தினேஷ் கார்த்திக் அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியானது முதைல் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியின் அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இப்போட்டியில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய ஜானி பேர்ஸ்டோவ் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய இளம் வீரர் பிரப்ஷிம்ரன் சிங்கும் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 25 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோனும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 17 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஷிகர் தவான் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். Read More...