Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த தினேஷ் கார்த்திக்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியானது 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் டூ பிளெசிஸ் 6 ரன்களிலும், விராட் கோலி 27 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் இணைந்த ராஜத் பட்டிதார் - வில் ஜேக்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ராஜத் பட்டிதார் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 5ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராஜத் பட்டிதார் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் ஜேக்ஸும் 41 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். Read More...