Tamil cricket news: Cricket News & Match Updates
‘இது ஒன்றும் ஐபிஎல் கிடையாது’ - இந்திய வீரர்களுக்கு முகமது கைஃப் எச்சரிக்கை!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயராகும் வகையில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நேற்றைய தினம் விளையாடியது. அதன்படி நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 53 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியானது தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மஹ்முதுல்லா - ஷாகில் அல் ஹசன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். Read More...