St vs ms head to head: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25 எலிமினேட்டர்: சிட்னி தண்டர் vs மெல்போர்ன் ஸ்டார்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Sydney Thunder vs Melbourne Stars Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணி விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி மற்றும் 2 போட்டி முடிவில்லை என மொத்தம் 12 புள்ளிகளைப் பெற்று குவாலிஃபையர் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது. அதேசமயம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியானது தொடக்கத்தில் 5 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய நிலையில், அதன்பின் நடைபெற்ற 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றியைப் பதிவுசெய்து பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது. 10 போட்டிகளில் 7 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்து அசத்தியது. மேற்கொண்டு இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டில் சிட்னி தண்டர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for St vs ms head to head - Tesst
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50