Skn vs slk pitch report: Cricket News & Match Updates
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SNP vs SLK Match 5, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் பேட்ரியாட்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமய கிங்ஸ் அணியானது நடப்பு சீசனில் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
SKN vs SLK: Match Details
- மோதும் அணிகள் - செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ்
- இடம் - வார்னர் பார்க் மைதான, செயின்ட் கிட்ஸ்
- நேரம் - செப்டம்பர் 02, அதிகாலை 4.30 மணி
SKN vs SLK: Live Streaming Details
கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும். Read More...