Shubman gill: Cricket News & Match Updates
ஷுப்மன் கில்லும் பேட்டிங் ஃபார்ம் மிகப்பெரிய கேள்விக்குறி தான் - தினேஷ் கார்த்திக்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்துள்ள தோல்வி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றிபெற்ற இந்திய அணி எப்படி தென் ஆப்பிரிக்கா மண்ணில் இன்னிங்ஸ் தோல்வியை பெற்றது என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இதற்கு இந்திய அணியின் அனுபவமில்லாத பவுலிங் அட்டாக் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதேபோல் ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என்று 3 இளம் வீரர்கள் தென் ஆப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக விளையாடுகின்றனர். இதனால் அவர்களிடமிருந்து பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்றாலும், குறைந்தபட்ச ரன்களையாவது சேர்க்க வேண்டிய தேவை உள்ளது. இதனிடையே இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான ஃபார்மில் இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More...