Sandeep sharma: Cricket News & Match Updates
சந்தீப் சர்மாவை புகழ்ந்து தள்ளிய பிரெட் லீ!
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே கடைசிப் பந்து வரை பரபரப்பாக சென்ற போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி ஒன்பது விக்கட்டுகள் இழப்புக்கு ஜாஸ் பட்லர் அரைசதத்துடன் 175 ரன்கள் எடுத்தது. இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் சென்னை அணிக்கு வெற்றி சாத்தியம் என்று ரசிகர்கள் நினைத்தார்கள்.
ஆனால் ராஜஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி சென்னை பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினார்கள். கடைசி ஒரு ஓவரில் 21 ரன்கள் தேவை எனும் பொழுது, முதல் மூன்று பந்துகளில் 14 ரண்களை விட்டுக் கொடுத்த சந்தீப் சர்மா, கடைசி மூன்று பந்துகளை மிகச் சிறப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே தந்தார். மூன்று பந்தில் மகேந்திர சிங் தோனி இரண்டு பந்துகளை சந்தித்து அவரால் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. Read More...