Saif hassan: Cricket News & Match Updates
ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து வங்கதேசம் அசத்தல்!
வங்கதேச அணி ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஸத்ரான் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸத்ரான் 7 ரன்னிலும், குர்பாஸ் 12 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து வந்த செதிகுல்லா அடலும் 28 ரன்னில் ஆட்டமிழக்க, டரகைல் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிரங்கிய தார்விஷ் ரசூலி நிதானமாக விளையாடி 32 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 3 ரன்னிலும், முகமது நபி ஒரு ரன்னிலும், கேப்டன் ரஷித் கான் 12 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். Read More...