Sachin tendulkar: Cricket News & Match Updates
சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி!
இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் என்ற மெகா இலக்கை ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது. ஜூன் 7ஆம் தேதி தொடங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட் வைத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சுமாராக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ரஹானே 89, ரவீந்திர ஜடேஜா 48, சர்துள் தாக்கூர் 51 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்து போராடி ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றிய நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 270/8 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. Read More...