Rr vs pbks match 65: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Rajasthan Royals vs Punjab Kings Dream11 Prediction, IPL 2024: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கேகேஆர் அணி மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில் மீதமுள்ள மூன்று இடங்களுக்கான போட்டி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் நாளை நடைபெறும் 64ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷிகர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றை உறுதிசெய்துள்ளது. இருப்பினும் ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளதன் காரணமாக அந்த அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
RR vs PBKS: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம் - பர்சபரா கிரிக்கெட் மைதானம், கௌகாத்தி
- நேரம் - இரவு 7.30 மணிகள்
RR vs PBKS: Pitch Report
பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் மிகவும் தட்டையானது என்பதால் பேட்டர்களுக்கு சொர்கபுரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் இருக்காது. இதனால் இங்கு அதிக ஸ்கோரை பேட்டர்கள் குவிக்கலாம். இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். Read More...
Related Cricket News for Rr vs pbks match 65 - Tesst
RR vs PBKS: Dream11 Prediction, 65th Match, Dream11 Team, Indian Premier League 2024
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14