Rohit sharma: Cricket News & Match Updates
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது கேப்டன் பாபர் ஆசாம், இஃப்திகர் அஹ்மத் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமகா கேப்டன் பாபர் அசாம் 57 ரன்களையும், இஃப்திகார் அஹ்மத் 37 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் கிரேய்க் யங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங், லோர்கன் டக்கர் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த பால்பிர்னி - ஹேரி டெக்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். Read More...