Robin uthappa: Cricket News & Match Updates
ஜிம்பாப்வே டி10 தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்பு!
கிரிக்கெட் எப்போதுமே பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி ,டி20 போட்டி என தனது வடிவத்தை மாற்றிக்கொண்ட கிரிக்கெட் தற்போது பத்து ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. ஏற்கனவே அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் பத்து ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் தற்போது இணைந்து இருக்கிறது ஜிம்பாப்வே கிரிக்கெட். ஜிம்பாவே கிரிக்கெட் பொருளாதார வகையில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஐசிசி கொடுக்கும் உதவித்தொகை வைத்து அந்த அணி வீரர்கள் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜிம்பாப்வேவில் அதிக அளவு கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் கிரிக்கெட்டை மேலும் கவர்ச்சிகரமாக கொண்டு செல்ல ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் டென் டி குளோபல் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய தொடரை நடத்துகிறது. இதற்கு ஜிம் ஆப்ரோ டீ டன் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. Read More...