Ravi shastri: Cricket News & Match Updates
இவர் இருந்திருந்தால் நாங்கள் அரையிறுதியில் தோற்றிருக்க மாட்டோம் - ரவி சாஸ்திரி!
மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கான மூன்று வடிவ கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொண்ட பிறகு, இந்திய அணிக்கு முழு நேர கேப்டனாக விராட் கோலி பொறுப்பு ஏற்று, முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரைச் சந்தித்தார். இந்த இந்திய அணியில் மேல் வரிசை ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி என்று பலமாக இருக்க, கீழே லோயர் மிடில் ஆர்டரில் நம்பிக்கை தரும் விதமாக மூத்த பேட்ஸ்மேன் கிரேட் பினிஷர் மகேந்திர சிங் தோனி இருந்தார்.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இருவரும் இருந்தார்கள். அதேவேளையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுப்படையில் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமத் சமி இருந்தார்கள். சுழற் பந்துவீச்சுக்கு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் சாகல் மற்றும் குல்தீப் இருந்தார்கள். இந்த வகையில் இந்திய அணி பலமான அணியாக இந்தத் தொடரில் கணிக்கப்பட்டது. Read More...