Probable xi: Cricket News & Match Updates
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
India Women vs West Indies Women 3rd ODI Dream11 Prediction: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய மகளிர் அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் மறுபக்கம் அடுத்தடுத்தபோட்டிகளில் படுதோல்வியைச் சந்தித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...