Pbks vs rr match 27: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் வலிமை மிக்க அணிகளில் ஒன்றாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செயல்பட்டு வருகிறது. இருப்பினும் கடைசி போட்டியில் அந்த அணி இறுதிவரை போராடியும் தோல்வியைச் சந்தித்துள்ள அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இந்த சீசனில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி ஒரு தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளதால் அந்த அணியின் வெற்றிப்பயணம் தொடரும் என ரசிகர்கள் எதிபார்க்கின்றனர். மறுபக்கம் பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பலமாக பார்க்கப்பட்டாலும், கடைசி போட்டியில் அந்த அணியும் இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளது. இதனல் இரு அணியும் இப்போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Pbks vs rr match 27 - Tesst
PBKS vs RR: 27th Match, Dream11 Team, Indian Premier League 2024
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14