Pathum nissanka: Cricket News & Match Updates
SL vs WI, 2nd T20I: விண்டீஸை பந்தாடி தொடரை சமன்செய்தது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கத்தில் தடுமாறினாலும், நேரம் செல்ல செல்ல பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...