Pat cummins: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டை வளர்ப்பது கடினம் - கிரேய்க் பிராத்வைட்!
வெஸ்ட் இண்டீஸ் ஆண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு தற்பொழுது சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் தலா மூன்று ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை அடிலெய்ட் மைதானத்தில் துவங்குகிறது. இந்த சுற்றுப்பயணம் பிப்ரவரி 13 ஆம் தேதி இறுதியாக நடக்கும் டி20 போட்டியுடன் முடிவுக்கு வருகிறது.
நடைபெற இருக்கும் இந்த இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வைட் தலைமையில் எதிர்கொள்கிறது. மேலும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக கைய்ல் மேயர்ஸ் மற்றும் நட்சத்திர வீரர் ஜேசன் ஹோல்டர் இருவரும் இந்த டெஸ்ட் தொடரை புறக்கணித்து விட்டார்கள். அடுத்து இந்த முறை நடக்க இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இரண்டு வருடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. Read More...