Pak vs nz tri series match: Cricket News & Match Updates
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Pakistan vs New Zealand ODI Dream11 Prediction: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியானது நாளை (பிப்ரவரி 08) தொடங்கவுள்ளது.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சமீப காலங்களில் இவ்விரு அணிகளும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேற்கொண்டு இவ்விரு அணிகளும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிக்கான லீக் சுற்றில் ஒரே குழுவில் இடம்பிடித்துள்ளன. இதன் காரணமாக அதற்கான முன்னேட்டமாக இப்போட்டியை இரு அணிகளும் எதிர்கொள்ளும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...