Nathan lyon: Cricket News & Match Updates
ஆஷஸ் தொடரில் 100 சதவிதம் வெற்றியைப் பெறுவோம் - நாதன் லையன்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலியா அணி, ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் வருகிற ஜூன் 16ஆம் தேதி முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை விளையாடவுள்ளது. எப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, உலக கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறத, அதேபோன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இந்த ஆஷஸ் தொடர், ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டிலும் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 4-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதனால் தற்போது இங்கிலாந்து மண்ணில் நடக்கும் இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி தன்னுடைய தோல்விக்கு பழி தீர்த்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More...