Marcus stoinis: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் ஐயர், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 207 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரியன்ஷ் ஆர்யா 6 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் பிரப்ஷிம்ரனுடன் ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். Read More...