Kl rahul: Cricket News & Match Updates
நாங்கள் செய்த சில தவறுகளால் எங்களால் இலக்கை எட்டமுடியவில்லை - கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்தார். லக்னோ அணி சார்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து கடின இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. இப்போட்டியின் இறுதி வரை போராடிய நிக்கோலஸ் பூரன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 58 ரன்களைச் சேர்த்திருந்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பெற்றார். Read More...