James anderson: Cricket News & Match Updates
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்தை துவம்சம் செய்தது இங்கிலாந்து!
நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் சிறப்பாக விளையாடி 84 ரன்களை குவித்தார். மிடில் ஆர்டர் அபாரமாக பேட்டிங் விளையாடிய ஹாரி ப்ரூக் 89 ரன்கள் அடித்தார். ஒல்லி போப் 42 ரன்களும், பென் ஃபோக்ஸ் 38 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 325 ரன்கள் அடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணியில் டாம் பிளண்டெல் மற்றும் தொடக்க வீரர் டெவான் கான்வே ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள். அபாரமாக ஆடிய டாம் பிளண்டெல் சதமடித்தார். பிளண்டெல் 138 ரன்களையும், டெவான் கான்வே 77 ரன்களையும் குவிக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 306 ரன்கள் அடித்தது. Read More...