Ipl 2021 news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் அதிரடி; இமாலய இலக்கை நிர்ணயித்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீமானித்தார்.
இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, தேவ்தத் படிகள் களமிறங்கினர். இதில் விராட் 5 ரன்களிலும், படிகள் 25 ரன்களிலும், படிதர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் - ஏபி டி வில்லியர்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இப்போட்டியில் இருவரும் அரைசதம் விளாசியும் அசத்தினர்.
பின்னர் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடி காட்டி வந்த டி வில்லியர்ஸ் ஆட்டத்தின் இறுதிவரை நின்று ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டி வில்லியர்ஸ் 76 ரன்களைச் சேர்த்தார்.
Read More...