Ipl 2021 news: Cricket News & Match Updates
செப்டம்பரில் ஐபிஎல் தொடர்; மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 09 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14 வது சீசினில் பல்வேறு வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்தி வவைக்கும் முடிவை எடுத்த பிசிசிஐ, எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மும்மரம் காட்டி வந்தது.
இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தகவலானது, ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது என்பதுதான். பிசிசிஐயின் இந்த முடிவை ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் அணிகளின் நிர்வாகங்களும் உறுதி செய்திருக்கின்றன. அதன்படி, எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளின் முதல் போட்டியானது ஐக்கிய அமீரகத்தில், செப்டம்பர் மாதம் 19 அல்லது 20ஆம் தேதிக்குள்ளாக தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read More...