Indian cricket team: Cricket News & Match Updates
விராட் கோலி இந்த விஷயத்தில் திணறி வருகிறார் - வாசிம் ஜாஃபர்!
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்ட சூழலில் கடைசி போட்டி நாளை இந்தூரில் நடைபெறவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், முகமது சிராஜ் என பல வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் நட்சத்திர வீரரான விராட் கோலி மட்டும் ஜொலிக்க தவறியுள்ளார்.
கடந்த இலங்கை தொடரில் சதம் அடித்திருந்த அவர், தனது ஃபார்மை நியூசிலாந்தில் காட்டவில்லை. முதல் போட்டியில் 10 பந்துகளை சந்தித்து 8 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றினார். 2ஆவது போட்டியில் 109 என்ற எளிய இலக்கை விரட்டிய போதும், 9 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இரண்டு முறையுமே மிட்செல் சாண்ட்னரிடம் தான் அவுட்டானார். Read More...