Indian cricket team: Cricket News & Match Updates
டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவது அவசியம் - முகமது கைஃப்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. குறிப்பாக ரோஹித் சர்மா தலைமையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா இறுதிப்போட்டியில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதில் இடம் பெறாத ரோஹித் சர்மா அடுத்ததாக நடைபெறும் தென் ஆப்பிரிக்க டி20 தொடரிலும் ஓய்வெடுக்க உள்ளதால் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More...