Ind vs eng: Cricket News & Match Updates
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 06ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இத்தொடரில் விராட் கோலி மேற்கொண்டு 94 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14000 ரன்களை பூர்த்தி செய்வதுடன், கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை அதிவேகமாக எட்டிய வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கவுள்ளார். Read More...