Ind vs eng: Cricket News & Match Updates
IND vs ENG, 4th Test: சதமடித்து சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 112 ரன்களுகே 5 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே சொதப்பினாலும், அதன்பின் ஜோ ரூட்டின் அபாரமான சதத்தின் மூலமாக சரிவிலிருந்து மீண்டவது. இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களைச் சேர்த்தது.
இதில் ஆட்டமிழக்காமல் உள்ள ஜோ ரூட் 106 ரன்களுடனும், ஒல்லி ராபின்சன் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்தன் மூலம் ஜோ ரூ சில சாதனைகளை குவித்துள்ளார். Read More...