Ind vs afg: Cricket News & Match Updates
நிகழ் காலத்தில் மட்டுமே இருக்க விரும்புகிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு பெறாத சில இந்திய வீரர்களுக்கு மத்தியில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஒருவரானார். குறிப்பாக கடந்த தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கடந்த டி20 தொடரில் துணை கேப்டனாக விளையாடிய அவர் இந்த தொடரில் விளையாடும் 11 பேர் அணியில் கூட இடம் பெறாதது சில முன்னால் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கடந்த வருடம் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் அதிலிருந்து குணமடைந்து 2023 உலகக்கோப்பையில் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் இன்னும் சரவெடியாக விளையாடும் திறமையை வெளிப்படுத்தாததால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நம்பப்படுகிறது. போதாக்குறைக்கு ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளில் அவுட்டாகும் பலவீனத்தை கொண்டிருப்பதால் அவரை அனைத்து போட்டிகளிலும் தேர்ந்தெடுக்க தேர்வு குழுவும் யோசிக்கின்றனர். Read More...