Glenn phillips: Cricket News & Match Updates
ஐசிசி உலகக்கோப்பை 2023: வார்னர், ஹெட் மிரட்டல்; நியூசிலாந்துக்கு 389 டர்கெட்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் மிக முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் திரும்ப வந்திருக்கிறார். கேமரூன் கிரீன் நீக்கப்பட்டு இருக்கிறார். நியூசிலாந்து தரப்பில் சாப்மேன் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருடைய இடத்தில் ஜிம்மி நீஷம் இடம் பெற்றிருக்கிறார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அடுத்த அரை மணி நேரத்தில் இந்த முடிவை எடுத்ததற்காக மொத்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகமும் வருத்தப்பட வேண்டி இருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்களாக வந்த டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அதிரடியில் நியூசிலாந்து பந்துவீச்சை மைதானத்தின் எல்லாப் பக்கத்திலும் அடித்து நொறுக்கினார்கள். Read More...