Fantasy xi tips: Cricket News & Match Updates
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
India Women vs West Indies Women 2nd ODI Dream11 Prediction: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய மகளிர் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற உத்வேகத்துடன் இப்போட்டியில் விளையாடவுள்ளது. மறுபக்கம் முதல் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவதுடன் இத்தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்க்வுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...