Fantasy xi tips: Cricket News & Match Updates
இந்தியா vs இங்கிலாந்து, ஐந்தாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India vs England 5th T20I Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (பிப்ரவரி 01) மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் நேற்று நடைபெற்ற போட்டியில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் தொடரையும் வென்றுள்ளது. இதனால் இப்போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என்பதால் இப்போட்டியின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. Read More...