England tour india 2024: Cricket News & Match Updates
ஜானி பேர்ஸ்டோவால் எந்த பிட்சிலும் ரன்களை சேர்க்க முடியும் - பிரண்டன் மெக்கல்லம்!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்டெ டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்த அந்த அணி, அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணியில் பென் டக்கெட், ஒல்லி போப் ஆகியோரைத் தவிர மற்ற பேட்டர்கள் சோபிக்க தவறி வருகின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் நடப்பு தொடரில் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு முறை கூட அரைசதத்தை கடக்காமல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இருப்பினும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வழங்கி வருகிறது. மேலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரும் அவருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். Read More...