England tour india 2024: Cricket News & Match Updates
இங்கிலாந்து பாஸ்பாலை விளையாடினால் ஆட்டத்தின் முடிவும் இப்படி தான் இருக்கும் - முகமது சிராஜ் எச்சரிக்கை!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் சில தினங்களாகவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
அதேசமயம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகினாலும், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், அஸ்வின், ஜடேஜா, பும்ரா போன்ற வீரர்கள் இருப்பது அணிக்கு உத்வேகமளிக்கும் என நம்பப்படுகிறது. அதேசமயம் மறுபக்கம் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடும் பாஸ்பால் எனும் அணுகுமுறையை இங்கிலாந்து அணி கடைபிடித்து வருவதால், அவர்களின் இந்த அணுகுமுறை இந்தியாவில் எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. Read More...