England cricket team: Cricket News & Match Updates
150ஆவது போட்டியில் டக் அவுட்; ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் வரிசையில் இணைந்த ஜோ ரூட்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.
இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஸாக் கிரௌலி- பென் டக்கெட் களமிறங்கினர். இதில் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றியும், ஜேக்கப் பெத்தேல் 10, ஜோரூட் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். Read More...