Eng vs wi: Cricket News & Match Updates
ENG vs WI, 1st T20I: பட்லர், டௌசன் அசத்தல்; விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற நிலையில், அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஜேமி ஸ்மித் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பென் டக்கெட் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்கம, அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஜேமி ஸ்மித் - ஜோஸ் பட்லர் இணை இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் ஜேமி ஸ்மித் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக், டாம் பான்டன் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். Read More...