Dinesh karthik: Cricket News & Match Updates
அவரது பேட்டிங்கால் தான் எங்களுக்கு ஒரு பாசிட்டிவ் எண்ணம் வந்தது - ரிஷப் பந்த்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4-வது போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக முதலில் முடிவடைந்த மூன்று போட்டிகளின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த வேளையில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை 2 க்கு 2 என்ற நிலையில் சமன் செய்துள்ளது.
அதன்படி நேற்றைய போட்டியில் டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியானது வழக்கம் போலவே முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது. அதன்படி வழக்கம்போல் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மிடில் ஆர்டரில் ஹார்டிக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரது அபார ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹார்திக் பாண்டியா 46 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 55 ரன்களையும் குவித்தனர். Read More...