Cricket match prediction: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs Bangladesh 2nd T20I Dream11 Prediction: வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்த நிலையில், ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேசா அணியானது வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் அதற்கான பதிலடியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...