Border gavaskar trophy: Cricket News & Match Updates
பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் குறித்து இயன் சேப்பல் கருத்து!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் முடிந்துவிட்ட நிலையில், தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடர் முடிந்த பின், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் நடக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.
இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. மேலும், இந்த தொடர் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை தீர்மானிக்கும் தொடருமாகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதும். இப்போதைக்கு 75.56 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது உறுதி. Read More...