Border gavaskar trophy: Cricket News & Match Updates
பார்டர் கவாஸ்கர் கோப்பை: சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நடப்பது கடைசி பார்டர் கவாஸ்கர் என்பதால் யார் வரலாற்று வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணியை பொறுத்தவரையில் முக்கிய வீரர் ரிஷப் பந்த் விளையாட முடியாமல் போனதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவர் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்படிப்பட்ட பிட்ச்-லும் அதிரடி காட்டுவார். இதே போல ஸ்ரேயாஸ் ஐயரும் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளதால், ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் விராட் கோலி மீது திரும்பியுள்ளது. இவரின் இன்னிங்ஸின் தான் இந்தியாவை கரை சேர்க்க அதிக வாய்ப்புகள் உள்ளன. Read More...