Border gavaskar trophy: Cricket News & Match Updates
விராட் கோலியுடனான உரையாடல் குறித்து மனம் திறந்த சாம் கொன்ஸ்டாஸ்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற இத்தொடரில் பல சுவாரஷ்யமான சம்பவங்களும் அறங்கேறியது. இதில் மிகமுக்கியமானது ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மீது கொண்டுவந்தது. ஏனெனில் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியின் நாதன் மெக்ஸ்வீனி இடம்பிடித்திருந்தார். Read More...