Au w vs sa w head to head: Cricket News & Match Updates
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
AU-W vs SA-W 1st Semifinal ICC Women's T20 World Cup 2024: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு குரூப் ஏ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் முன்னேறி அசத்தின.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...