Andre russell: Cricket News & Match Updates
T20 WC 2024: டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசியது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் ஷாய் ஹோப் ரன்கள் ஏதுமின்றியும், நிக்கோலஸ் பூரன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த கைல் மேயர்ஸ் - ரோஸ்டன் சேஸ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் கைல் மேயர்ஸ் 35 ரன்களிலும், அரைசதம் கடந்த ரோஸ்டன் சேஸ் 52 ரன்களிலும் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுகளையும், யான்சென், மார்க்ராம், கேசவ் மகராஜ், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதன்பின் 136 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு தொடக்க வீரரான ஹென்டிரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், குவின்டன் டி காக் 12 ரன்களிலும் அவுட் ஆகினர். Read More...