Allah ghazanfar: Cricket News & Match Updates
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கஸான்ஃபர்; மாற்று வீரரை அறிவித்தது மும்பை இந்தியன்ஸ்!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் போட்டிபோட்டு வீரர்களைத் தேர்வு செய்துள்ளனர். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக தனது அணியில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. ஏனெனில் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கஸான்ஃபரை ரூ.4.80 கோடிக்கு ஏலத்தில் வாங்கி இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் மீது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தது. Read More...