Afg vs uga: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை 2024: சாம் கரண் சாதனையை முறியடித்த ஃபசல்ஹக் ஃபரூக்கி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்திருந்த ஆஃப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் மற்றும் ஸத்ரான் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 76 ரன்களையும், இப்ராஹிம் ஸத்ரான் 70 ரன்களையும் சேர்த்தனர். உகாண்டா அணி தரப்பில் காஸ்மஸ் கேவூடா, கேப்டன் பிரையன் மசாபா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...