Adkr vs dc: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2024 எலிமினேட்டர்: அபுதாபி நைட் ரைடர்ஸை வீழ்த்தி துபாய் கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் புள்ளிப்பட்டியளின் 3ஆம் இடத்தை பிடித்த அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, நான்காம் இடத்தை பிடித்துள்ள துபாய் கேப்பிட்டல்ஸ் அணி விளையாடின. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு டாம் பாண்டன் - மேக்ஸ் ஹோல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பாண்டன் அதிரடியாக தொடங்க, மறுபக்கம் மேக்ஸ் ஹோல்டன் ஒரு ரன்னிலும், லுயிஸ் டு ப்ளூய் 9 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து எமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாம் பாண்டனும் 44 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...