Abishek porel: Cricket News & Match Updates
4,6,4,4,6: ஹர்ஷல் படேல் ஓவரை பிரித்து மேய்ந்த அபிஷேக் போரல் - வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ர பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில்பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அதன்பின் 20 ரன்களில் மிட்செல் மார்ஷும், 29 ரன்களில் டேவிட் வார்னரும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஷாய் ஹோப்பும் 33 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் 18 ரன்களுக்கும், ரிக்கி பூஸ் 3 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அக்ஸர் படேலும் தனது பங்கிற்கு 21 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...