Ravindra jadeja: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்; சிஎஸ்கேவை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 52ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் எந்த மாற்றங்களும் இல்லாத நிலையில், ஆர்சிபி அணியில் ஹேசில்வுட்டிற்கு பதிலாக லுங்கி இங்கிடி லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஜேக்கப் பெத்தெல் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். Read More...