Nitish kumar reddy: Cricket News & Match Updates
ஜெய்ஸ்வால், நிதிஷ் போன்ற வீரர்கள் தேவை - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியின் பேட்டர்கள் பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்டோரின் பேட்டிங் கவலையளிக்கும் வகையில் அமைந்திருந்தது. அதேசமயம் இறுதியில் ரிஷப் பந்த் ரன்களைச் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் தொடர்ந்து சோபிக்க தவறியதே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. Read More...