Abhishek sharma: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸுக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒருபக்கம் டிராவிஸ் ஹெட் ரன்களைச் சேர்க்க தடுமாறிய நிலையில், மறுபக்கம் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்தளத்தை அமைத்தைக் கொடுத்தனர். Read More...